தாயுமானவள்
"தாயுமானவள்" என்ற பெயரில் நான் எழுதிய அடுத்த சிறுகதை.
இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த இடத்திலும் சலனப்படாமலே வாழ்ந்து வந்தார் ராமகிருஷ்ணன்.
மனைவி இறக்கும் பொழுது ராமச்சந்திரனுக்கு வயது வெறும் முப்பத்தி மூனு தான்.
மறுமணத்தை பற்றி சிந்திக்கவும் இல்லை, சலனப்பட்டுப்போய் எங்கும் நிற்க்கவும் இல்லை.
ஐந்து ஆண்டுகளாக மனைவி சத்தியவாணி உடன் வாழ்ந்த வாழ்வின் நினைவுகளும்,மகன் விஷ்ணுவுக்கு நல்ல தகப்பனாக வாழவேண்டும் என்ற எண்ணமும் அவரை நல்ல பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தது.
தட்டி விழுந்தால் கெட்டு போக கூடிய சூழல்கள் எத்தனையோ இருந்தும் அத்தனையும் கடந்து வந்திருந்தார் ராமகிருஷ்ணன்.
சட்டமும் சமூகமும் அங்கிகரித்த மறுமணம் கூட, மனைவிக்கு செய்யும் துரோகம் என நினைத்தார்.
மறுமணத்திற்க்காக பல நெருக்கடிகள். அதனால் சில உறவுகளிடம் உறவை துண்டித்தார்.
ராமகிருஷ்ணனுக்கு இப்பொழுது வயது ஐம்பத்தெட்டை தொட்டுவிட்டது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளான் துறையில் வேலை செய்கிறார்.
மகனுக்கு வயது இருபத்தேழு ஆகிறது. அவனும் மத்திய அரசு பணியில் உள்ளான். புள்ளியல் துறையில் டெல்லியில் வேலை செய்கிறான்.
இந்த ஆண்டு எப்படியாவது அவனுக்கு திருமணம் செய்து விட வேண்டும், என்ற முடிவில் இருந்தார்.
ஊட்டியில் உள்ள அவருடைய கிளை அலுவலகத்திற்கு தணிக்கை செய்வதற்காக வந்திருந்தார்.
ஊட்டி அவருக்கு புதிது, முதன் முறையா இப்பந்தான் வந்திருக்கார்.
மூன்று நாள் பணி முடிந்து இன்று ஊர் திரும்புவதற்காக ஊட்டி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது தான் அவரிடம் அந்த சலனம் வரத்தொடங்கியது.
இத்தனை ஆண்டுகால விரதம் கலைந்து போகுமோ என அவர் மனம் பதறியது.
அவர் எதிரே நின்று கொண்டிருந்த அந்தப் பெண், அவளது உதடுகளை சுழித்து சமிக்கை செய்வதும், கண்களை சிமிட்டி வா என அழைப்பதும் ஆக இருந்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்தாலே அவள் செய்து வரும் தொழில் யாதென்று தெரியுமளவு உடையும், செய்திருந்த அலங்காரமும், அவள் தோற்றமும் காண்பித்தது.
.
எத்தனையோ பேரழகிகள் விரித்த வலையெல்லாம் கிழித்தெறிந்தவர் தான் ராமகிருஷ்ணன். இந்த மாதிரி பெண்களை பார்த்தாலே பாவம் என்று எண்ணியிருந்தவர்,
ஏதோ ஒரு புள்ளியில் அவர் சலனம் அடைகிறார்.
அவரின் உள்ளுணர்வு தவறி விடாதே, தவறி விடாதே என எச்சரித்தது.
அந்தப் பெண் நின்று கொண்டு இருந்த இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று அமர்ந்தார் ராமகிருஷ்ணன்.
இடம் மாறி சென்றாலும் அவர் இதயத்தில் ஏற்பட்ட சலனம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தன்னை சலனப் படுத்திய பெண்ணை அவர் கண்கள் தேடியது. அவள் நின்று கொண்டு இருந்த இடத்தில் இப்பொழுது அவள் இல்லை. அவரது கண்கள் பார்வையை விசாலமாக்கி சுற்றி முற்றிலும் தேடியது.
.
அந்தப் பெண்ணைக் காணவில்லை, நல்லவேளை அவளை காணல, என அவர் ஆறுதல் அடைந்தார்.
"இறைவா இனி ஒரு சூழல் எனக்கு இப்படி ஏற்படக்கூடாது" என ராமகிருஷ்ணனின் மனம் இறைவனிடம் வேண்டியது.
ஆனால் அவரது கண்கள் அவரது கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பெண்ணை மீண்டும் தேடியது
இப்பொழுது தொட்டுவிடும் தூரத்தில் அவள் .
தனது பக்கத்து இருக்கை இருக்கையில் வந்து அமர்ந்திருந்தாள்.
"வாரியா"
என்ற அவளின் ஒற்றை வார்த்தையில் அவர் நிலைகுலைந்து போனார்.
மனதுக்கும் செயலுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் மனம் தோற்றுப்போனது.
அவரது மௌனமே அந்தப் பெண்ணின் கேள்விக்கு பதிலானது.
"ஒன்னும் பயப்படாதிக ஒரு பிரச்சனையும் வராது, எனக்கு இது ஒரு வயத்து பொளப்பு, எல்லாத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன்" என்றாள் அந்தப் பெண்.
"எவ்வளவு"
என்ற அவரது ஒற்றை வார்த்தையில் அவர் கடைப்பிடித்து வந்த பிரம்மச்சாரியம் தூள் தூளாக நொறுங்கிப் போனது
"ஒரு நாளுக்கு ஆயிரத்தய்னுறு ரூபா எனக்கு, அது போக லாட்ஜ் வாடகை, ஆட்டோ செலவை நீங்களே பார்த்துக்கணும்.
எனக்கு கொடுக்க வேண்டிய ஆயிரத்தய்னுறு ரூபாய்ல ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டேன்.
அதுல நான் கண்டிப்பா இருப்பேன், பணம் விஷயத்துல நான் கொஞ்சம் காரார்தான், சம்மதமா "என்று கேட்டாள்.
சரி என்பதை தன் கண்களால் கூறிவிட்டு, சிறிய மௌனத்திற்குப் பின் "பிரச்சனை ஏதும் வராதுல்ல" எனக்கேட்டார்.
"தெரிஞ்ச லாட்ஜ் தான் அங்க போலீஸ் ரைட் எதுவும் வராது, பயப்படாம வாங்க" என்றாள் அந்தப் பெண்.
வெளியே சென்று திரும்பி வந்தவள்
"ஸ்டேசன் வெளியே கன்னிதாய்ன்னு ஒர் ஆட்டோ நிற்க்குது, அதுல போய் ஏறி உட்க்காருங்க வாரேன்" என்றாள்.
இராமகிருஷ்ணன் ஆட்டோவில் அமர்ந்திருந்தார் மழை பெய்ததால் ஷட்டரை இறக்கி விட்டார் ஆட்டோகாரர்.
ஷட்டரை தூக்கி அந்த பெண்ணும் உள்ளே வந்து அமர்ந்தாள். ஆட்டோ புறப்பட்டது.
அந்த பெண்ணின் சேலை முந்தானை அவர் மேல் கிடந்தது, அந்த முந்தானையின் பரிசம் ஆயிரம் உணர்வுகளை அவருக்குள் பொங்க செய்தது.
அவருக்குள் பதட்டம் அதிகரித்தது, ஊட்டி குளிரிலும் அவர் உடல் வியர்க்க துவங்கியது. அவர் இதயம் படபடத்தது, அவர் மார்பு பகுதி வலிக்க துவங்கியது.
இரமகிருஷ்ணனின் உடலில் ஏற்ப்பட்ட மாற்றத்தை பார்த்த அந்த பெண்.
"சார் என்ன செய்யுது"என கேட்டாள்.
"திடீர்ன்னு படபடன்னு வருது நெஞ்சு வலிக்குது" என்றார்.
கொஞ்சம் கூட யோசிக்காமல்"வண்டிய அகல்யா ஆஸ்பத்திரிக்கு விடு" என்றாள்.
வண்டி அகல்யா ஆஸ்பத்திரியை நோக்கி திரும்பியது.
"சார் ஊட்டிக்கு எதுக்கு வந்திக யாரையாவது கூப்பிடனுமா?". என கேட்டாள்.
"ஊட்டியை சுற்றி பார்க்க தான் வந்தேன், இங்கு யாரையும் தெரியாது" என்றார்.
தனது அலுவலகத்தில் தனக்கு இருக்கும் மரியாதை குறைந்து விடும் என்பதால் இந்த பொய்யை சொன்னார்.
"சாதாரண வலி தான், பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் இரண்டு நாள் கண்டிப்பாக மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர்.
அலுவலகத்திற்க்கு விடுமுறை சொல்லிவிட்டார் மகனிடம் இரண்டு நாள் ஊட்டியை சுற்றி பார்க்க தங்கி விட்டதாக சமாளித்தார்.
இன்று ஆஸ்பத்திரியில் சேர்ந்து மூன்றாவது நாள். இந்த மூன்று நாளும் அவருடனே இருந்து அந்த பெண் கவனித்துக்கொண்டாள். முதல் நாள் இரவு முழுவதும் அவள் தூங்கவேயில்லை,
"பல்ஸ் குறைந்தால் உடனே சொல்ல வேண்டும்" என டாக்டர் கூறியிருந்ததால். மானிட்டரையே பார்த்தபடி இருந்தாள். இந்த மூன்று நாளில் அவள் பட்ட கஷ்டம் அதிகம்.
டாக்டர் டிஸ்சார்ச் செய்ய சொல்லிவிட்டார்,
மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு வந்தாள் அந்த பெண்.
அறையை காலி செய்ய தயாராய் இருந்தார் இராமகிருஷ்ணன்.
தன் பர்சை எடுத்தார், அதிலிந்து பத்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்தார், அந்த பெண்னை அழைத்தார் "உன் உதவிக்கு ரெம்ப நன்றி இத வச்சிக்கோ" என அந்த ஐயாயிரம் ரூபாவை கொடுக்க முயன்றார்.
"இது எதுக்கு" என்று கேட்டாள்.
"நீ தான் எனக்கு ஒரு நாளைக்க ஆயிரத்தய்னுறு வேணும்ன்னு கேட்டாய், அதில் கூடுதலாக ஐனுறு இருக்கு வைத்துக்கொள்" என்றார்.
அவள் வாங்க மறுத்தாள்.
"வேற என்ன வேனும் தருகிறேன்" என்றார்.
"விட்டா உம்ம சொத்த எழுதி தாரேம்ன்னு சொல்லிக போல", என்றாள்.
"மூனு நாளா உன் பொழப்பு என்னால போச்சி அது தான்"என்றார்.
"சார் அது எனக்கு பொளப்பு, இது அப்படியில்லை, இந்த துட்ட மட்டும் வாங்கினா, நான் பார்க்க தொழிலை விட கேவலமாயிடும். நீயே வச்சிக்கோ நான் கிளம்புறேன்" என்றாள்.
அவளின் வார்த்தைகள் இராமகிருஷ்ணனுக்கு அதிர்ச்சியளித்தது, மீண்டும் ஒரு முறை அவர் நோயுற்றது போல் உணர்ந்தார்.
"என்னை மன்னித்து விடு, சரி உன் பெயரென்ன" என கோட்டார்.
"வள்ளி" என்றாள்.
அந்த பெயரை கேட்டதும் இராகிருஷ்ணனின் உடலில் ஓடும் ரத்தம் ஒரு நிமிடம் நின்றது போல் ஆனார்.
அவளை அழைத்தார்,
அவர் அருகில் வந்தாள், அவளின் நெற்றியில் ஒர் முத்தமிட்டார்,
கண்களில் கண்ணீர் வர "போய் வா"என்றார்.
அவள் அங்கிருந்து சென்றாள்.
இராமகிருஷ்ணனின் அம்மாவின் பெயர் வள்ளியம்மை.
எழுதியவர்,
R.V.நல்ல பெருமாள்.B.Com.BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.
Comments
Post a Comment