Skip to main content

வேர் தனது தனது கிளைக்கு எழுதும் கடிதம்

வேர் தனது தனது கிளைக்கு எழுதும் கடிதம்


அன்பிற்குறிய ஆஷாவுக்கு, 

உன் அப்பாவுக்கு உயிரும், 
உனக்கு உறவுகளும் கொடுத்த உன் பாட்டியின் கடிதம்.

உனக்கு தெரிந்தும், தெரியாமலும் உள்ள சிலவற்றை தெரிவிக்கவே இந்த கடிதம்.

நலம் நலமறிய ஆவல்.

கத்தியும் இரத்தமுமின்றி சிசரியன் அறியா காலத்தில், 

சிசுவாய் நீ பிறவிக்க உன் அன்னைக்கு பேரு காலம் பார்த்தவள் நான். 

உன் அம்மாவின் பேருகாலம் பார்த்தததால், நான் பேரு கால மருத்துவரானேன்...

உனது ஒரு வயதில் உன் கண் அருகில் கட்டி வந்தது, 

அப்பொழுது பன்னி வாகை இலையை உப்போடு கலந்து, கைகளில் கசக்கி உன் கட்டியில் கட்டினேன்.
கட்டி காணாமல் போனது. 

அன்று நான் தான் உன் கண் மருத்துவர்.

உன் இரண்டாம் வயதினிலே  உன் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்ப்பட்டது. 

உடனே நான் மொசு மொசுக்கை இலையை இடித்து சாரெடுத்து, அதில் வரட்டி எறிந்த சாம்பலை நீர் இட்டு பிசைந்து,
உன் தேகமெல்லாம்  தேய்த்து விட்டேன். 

ஒரே நாளில் தழும்பு தடம் இன்றி மறைந்தது. 

அன்று நான் உன் தோல் மறுத்துவர்.

பிறகு உன் ஐந்தாம் வயதில் உன் பல் இடையில் பூச்சி வந்து அவதியுற்றாய்.

உடனே வெட்டருவாவை நெருப்பில் சுட்டு, அதை அரையளவு தண்ணீர் உள்ள சட்டியில் பக்கவாட்டாய் படுக்க வைத்து, 

அந்த அருவாளில் கண்டங்கத்திரி விதையை தூவினேன், அதில் வந்த புகையை உன் வாயால் சுவாசிக்க செய்து பல் பூச்சியை கொன்றேன்.

தண்ணீரில் சிதறி கிடந்த கண்டங்கத்தரி விதைகளை, பூச்சி என கூறி உள்னை நம்ப செய்தேன். 

அன்று நான் தான் உன் பல் மந்ததுவர்.

உனக்கு ஏழு வயதிருக்கும், கண்டிப்பாக இது உன் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.

உன் காதில் சீழ் வடிந்தது, நீ காது வலியால் துடித்தாய்.

நானோ பெரிய மிளகாய் வத்தலை நடுவில் உடைத்து, காம்பு உள்ள பகுதியை மட்டும் எடுத்து.

அதில் இருந்த விதையை நீக்கி அந்த கூட்டில் கத்தாளை செடியின் சாரும் நல்லெண்னயும் விட்டு, மெழுகுவத்தியில் சுட்டு, பின் இளம் சூட்டில் உன் காதில் விட்டேன்.

காணாமல் போனது வலியும் உன் காதில் வடிந்த சீழும்.

அன்று நான் தானே உன் காது மருத்துவர். 

மொத்தத்தில் நான் தான் உன்மையான குடும்ப மருத்துவர்.

அன்று குழந்தையாய் இருந்த நீ, ஒர் குழந்தைக்கு தாயாய் ஆகி இன்று வந்துள்ளாய், மிக்க மகிழ்ச்சி. 

உன் குழந்தையை பார்க்க எனக்கு ஆசை, நீ ஏனோ காட்டவில்லை.

சரி இன்று நீயும் உன் அம்மாவும் ஏதோ காதுக்குள் கிசுகிசுத்து பேசினீர்கள்,

நீ உன் அம்மாவை பார்த்து "பாட்டியிடம் குழந்தையை கொடுத்து விடாதே ஏதாவது இன்பெக்சன் ஆகிவிடும்".என்றாய்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது. 

ஆமாம் இன்பெக்சன்ன என்னம்மா?

நன்றி 

இப்படிக்கு.
உன் நலம் விரும்பும் பாட்டி அம்புஜம்.

எழுதியவர்.
R.V. நல்ல பெருமாள் BCom BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.

Comments

Popular posts from this blog

மனிதம்

ம னி த ம் எனது அடுத்த கதையை பதிவிட்டுள்ளேன், நேரமிருந்தால் படியுங்கள். "ஏய் சன்னாசி காலங்காத்தால கருவாட்டு வதக்கி  உன் பொண்டாட்டி கொடுத்திருக்கா போல" சைக்கிளுக்கு ஏர் பிடித்துக்கொண்டிருந்த சன்னாசியிடம் கேட்டார் பட்டாளத்துக்கார செல்லையா நாடார். "முதலாளி உம்ம மாதிரி நான் என்ன பொன்னி அரிசியா  சாப்பிடுறேன், லபக்குன்னு உள்ள போக, இந்த ரேஷன் அரிசிக்கு காரசாரமா கருவாட்ட கிருவாட்ட வெச்சு சாப்டா தானே உள்ளே இறங்குது." என்றான் சன்னாசி. "காலங்காத்தால அவன் கிட்ட வம்பிழுக்கிறிகளே மாமா" என்றாள் சைக்கிள் கடை பூமாரி,  பூமாரி வீட்டுக்காரன் ஜெயம் பட்டாளத்துக்காரருக்கு சின்னையா பேரன், அனந்தர சொக்காரன் அவன் ஊர் பள்ளிகூடத்துல சத்துணவு அமைப்பாளரா இருக்கான். "எம்மா பூமாரி உங்க மாமா என் வீட்டு கூரைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்து பார்த்தது மாதிரியே சொல்லுதாறு பாரும்" என்றான் சன்னாசி   "உனக்கும் வேலையில்ல உங்க முதலாளிக்கும் வேற வேலையில்லை என்றாள்" பூமாரி "முதலாளி என் பொண்டாட்டி கருவாட்ட வதக்கி வச்சிறுக்கான்னு எப்படி கரெக்டா  சொன்னிங்க" என்று கேட்டான் சன்னா...

மூணு கால் நாய்

மூணு கால் நாய் "மூணு கால் நாய்,  என்ற பெயரில் என் சிறு கதை. ஒத்த நாள் கூட பிரிந்திருந்ததில்லை. உலகத்தை விட்டுப் போய் இன்னோட மூணு நாளாச்சு. மனதளவில் கொலஞ்சி போயிருந்தார் உலகநாதன். பதினைந்து நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கும்போதே கிறுகிறுன்னு வருதுன்னு சொல்லி கீழே விழுந்தா.  தென்காசி திருநெல்வேலி மதுரைன்னு ஆம்புலன்ஸில் சுத்தி கடைசில  பொணமாத்தான் இலஞ்சிக்கு வந்தாள் கோமதி. நோய்க்கு புரியாத பேர வச்சிருக்கான், நோய கண்டுபுடிக்க மெஷின் வச்சிருக்கான், ஆனால் நோய குணமாக்குற மருந்து மட்டும் இல்லைங்கிறான்.  உலகநாதன் பதினைந்து நாள் போராடி பார்த்தார், கடைசியில ஒன்னும் நடக்கல இறந்து போகக் கூடிய வயதும் இல்லை. ஆடி மாசம் வந்தா ஐம்பத்தைந்து வயசு ஆகுது. சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னு பிறந்தாள். அதனாலே கோமதின்னு பெயர் வச்சாங்க. மூச்சி விடுததுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட புருஷன நினைச்சி தான் புலம்பினா. "உங்க அப்பாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துட்டேன், அவர நெனைச்சா பாவமா இருக்குடா, அவர சோத்துக்கு கையேந்த வச்சிராதிங்கடா" என கை எடுத்து கும்பிட்டு கேட்டாள். ____ உலகநாதன் வேளாண் துறைய...

மாட்டு வண்டி பாதையிலே

மாட்டு வண்டி  பா தை யி லே தென்றலின் தலைவாசல் பாம்புக்கோவில் சந்தை, குற்றாலத்திற்க்கு ரயிலில் வருபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்துக்குள்ள வண்டி வரும் பொழுது தென்றல் நம்மை வரவேற்க்கும். மெல்லிய தூறலும், ஜிலுஜிலு காற்றுடன் இதமான காலையாக இருந்தது அந்த காலை நேர பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். பாம்புக்கோவில் சந்தையில் ரயில் இரண்டு நிமிடம் மட்டும் தான் நிற்க்கும். எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இறங்கினார் ஜெயச்சந்திரன் அவர் பின்னாலே இறங்கிய உமா "சித்தப்பா போயிட்டு வரேன்"என்றார்.  "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் விடைகொடுத்தார் ஜெயச்சந்திரன். சொந்த பெரியா மகன் புள்ள, அனந்தர சொக்காரன் மகா. அப்படியிருந்தும் நின்று பேச நேரம் இல்லாதது போல் வேகமாக வெளியே நடந்தார் ஜெயச்சந்திரன். உண்மையிலே நேரம் இருந்தாலும் அவர் இப்படித் தான் செய்வார். இது அவர் குணநலம்,  வாழ்க்கை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என எண்ணுபவர். இது தான் தனி மனிதனுடைய வெற்றிக்கான பார்முலா  என்று வாழ்ந்து வருபவர்.  "நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை பற்றி அசை போட்டால் எதிர்...