கூனன் கிணற்றை சுடலை அக்கா பேரன் வெள்ளையன் வாங்கியிருந்தான். அத ப்ளாட் போட முடிவு செய்திருந்தான். "பேரப்புள்ள அந்த கிணத்துல வேப்ப மரத்தடியில ஒர் கல் நட்டிருக்கும், அத புடுங்கி தூற போட்டுறாத, அந்த கல்ல இங்க கொண்டா" என்றார் சுடலை. "அந்த கல்லு உமக்கெதுக்கு" என கேட்டான் வெள்ளையன். "தாத்தாவுக்கு வேணும்யா" என கேட்டார் சுடலை. ____________ அந்த கல்லுக்கும் சுடலைக்கும் ஐம்பது வருட பந்தம். நினைவு பெட்டகத்தில் பொத்தி வைத்திருந்த நினைவலயில் மூழ்கினார் சுடலை. ---------- பக்கத்துல எங்கயோ கோடாங்கி அடிக்கும் சத்தம் கேட்டது. "இந்த ஐப்பசி, கார்த்திகை வந்துட்டா போதும் நம்மள ஒரங்க விடமாட்டாங்க, நாட்டுல இருக்க பேயெல்லாம் இந்த நாலு தெருவுக்கு மொத்தமா வந்துரும்" என்றான் சுடலை. சுடலை பேசிக்கொண்டே எலி பொறிக்கு டயரை அருத்துக்கொண்டிருந்தான். இந்த சுற்று வட்டாரத்தில் வயக்காட்டுல எலி புடிக்கதுல சுடலைய மிஞ்ச ஆளே இல்லை. கார்த்திகை மார்கழியில நெல்லுல கருது வர ஆரம்பிக்கும், கூடவே எலியும் வந்திடும். சுடலைக்கு அப்ப மவுசு தான் கொஞ்சம் வருமாணமும் கிடைக்கும். மற்ற காலத்தில துணி தொவைக்...
ஏக்கம் இந்த அம்மாவாசை வந்தா போயிடும்ன்னு நம்பிக்கையில் இருந்தார் லிங்கம். அம்மாவாசையும் வந்து போயிடுச்சி. ஆனால் தொண்டை குழியில் சின்ன துடிப்புடன் அருணகிரி நாடார் உடலில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டு தான் இருக்குது. "ஏதோ ஒர் ஏக்கம் அவர் தொண்டையில் தவிக்குது" என்றார் ரத்தினம் நாடார். அது என்னன்னு யாருக்கும் புரியல. சாப்பாடு நின்னு ஒரு வாரமாச்சி, போன வாரமே போயிடும்ன்னு நெனைச்சி வந்த மூத்த மகள் செல்லதாய், மாடு கண்ண பார்க்க ஆளில்லன்னு போயிட்டா. அருணகிரி நாடாருக்கு மூனு பிள்ளைக. மூத்தவ செல்லதாய சுரண்டையில கட்டி குடுத்திருக்கு, அவமகளை தான் லிங்கம் கட்டியிருக்கார். லிங்கம் அருணகிரி நாடாரின் ஒரே மகன். இன்னொருத்தி ரஞ்சிதம். உள்ளுர்லே கட்டி கொடுத்திருந்தார். மனைவி இறந்து பத்து வருஷமாச்சி. அருணகிரி நாடார் அதிக நிலபுலத்துக்கு சொந்தகாரர். இன்னைக்கு அவர் கிட்ட இவ்வளவு நிலம் இருக்குன்னா அதுக்கு காரணம் வக்கில் இராமநாதய்யர் தான். இராமநாதய்யர் தான் வழக்க ஜெயிச்சி கொடுத்து, கை விட்டு போன அம்புட்டு நிலத்தையும் மீட்டு கொடுத்தார். அவருக்கு பூர்விகமான சொத்துகளை வித்து கோவிந்த பேரியில அருணாசல முதலியார்...