Skip to main content

Posts

Showing posts from July, 2020

செவ்வந்தி.

கூனன் கிணற்றை சுடலை அக்கா பேரன் வெள்ளையன் வாங்கியிருந்தான். அத ப்ளாட் போட முடிவு செய்திருந்தான். "பேரப்புள்ள அந்த கிணத்துல வேப்ப மரத்தடியில ஒர் கல் நட்டிருக்கும், அத புடுங்கி தூற போட்டுறாத, அந்த கல்ல இங்க கொண்டா" என்றார் சுடலை. "அந்த கல்லு உமக்கெதுக்கு" என கேட்டான் வெள்ளையன். "தாத்தாவுக்கு வேணும்யா" என கேட்டார் சுடலை. ____________ அந்த கல்லுக்கும் சுடலைக்கும் ஐம்பது வருட பந்தம். நினைவு பெட்டகத்தில் பொத்தி வைத்திருந்த நினைவலயில் மூழ்கினார் சுடலை. ---------- பக்கத்துல எங்கயோ கோடாங்கி அடிக்கும் சத்தம் கேட்டது. "இந்த ஐப்பசி, கார்த்திகை வந்துட்டா போதும் நம்மள ஒரங்க விடமாட்டாங்க, நாட்டுல இருக்க பேயெல்லாம் இந்த நாலு தெருவுக்கு மொத்தமா வந்துரும்" என்றான் சுடலை. சுடலை பேசிக்கொண்டே எலி பொறிக்கு டயரை அருத்துக்கொண்டிருந்தான். இந்த சுற்று வட்டாரத்தில் வயக்காட்டுல எலி புடிக்கதுல சுடலைய மிஞ்ச ஆளே இல்லை. கார்த்திகை மார்கழியில நெல்லுல கருது வர ஆரம்பிக்கும், கூடவே எலியும் வந்திடும். சுடலைக்கு அப்ப மவுசு தான் கொஞ்சம் வருமாணமும் கிடைக்கும். மற்ற காலத்தில துணி தொவைக்...

ஏக்கம்

ஏக்கம் இந்த அம்மாவாசை வந்தா போயிடும்ன்னு நம்பிக்கையில் இருந்தார் லிங்கம்.  அம்மாவாசையும் வந்து போயிடுச்சி. ஆனால் தொண்டை குழியில் சின்ன துடிப்புடன் அருணகிரி நாடார் உடலில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டு தான் இருக்குது. "ஏதோ ஒர் ஏக்கம் அவர் தொண்டையில் தவிக்குது" என்றார் ரத்தினம் நாடார். அது என்னன்னு யாருக்கும் புரியல. சாப்பாடு நின்னு ஒரு வாரமாச்சி, போன வாரமே போயிடும்ன்னு நெனைச்சி வந்த மூத்த மகள் செல்லதாய், மாடு கண்ண பார்க்க ஆளில்லன்னு போயிட்டா. அருணகிரி நாடாருக்கு மூனு பிள்ளைக. மூத்தவ செல்லதாய சுரண்டையில கட்டி குடுத்திருக்கு, அவமகளை தான் லிங்கம் கட்டியிருக்கார். லிங்கம் அருணகிரி நாடாரின் ஒரே மகன். இன்னொருத்தி ரஞ்சிதம். உள்ளுர்லே கட்டி கொடுத்திருந்தார். மனைவி இறந்து பத்து வருஷமாச்சி. அருணகிரி நாடார் அதிக நிலபுலத்துக்கு சொந்தகாரர். இன்னைக்கு அவர் கிட்ட இவ்வளவு நிலம் இருக்குன்னா அதுக்கு காரணம் வக்கில் இராமநாதய்யர் தான். இராமநாதய்யர் தான் வழக்க ஜெயிச்சி கொடுத்து, கை விட்டு போன அம்புட்டு நிலத்தையும் மீட்டு கொடுத்தார். அவருக்கு பூர்விகமான சொத்துகளை வித்து கோவிந்த பேரியில அருணாசல முதலியார்...

மனிதம்

ம னி த ம் எனது அடுத்த கதையை பதிவிட்டுள்ளேன், நேரமிருந்தால் படியுங்கள். "ஏய் சன்னாசி காலங்காத்தால கருவாட்டு வதக்கி  உன் பொண்டாட்டி கொடுத்திருக்கா போல" சைக்கிளுக்கு ஏர் பிடித்துக்கொண்டிருந்த சன்னாசியிடம் கேட்டார் பட்டாளத்துக்கார செல்லையா நாடார். "முதலாளி உம்ம மாதிரி நான் என்ன பொன்னி அரிசியா  சாப்பிடுறேன், லபக்குன்னு உள்ள போக, இந்த ரேஷன் அரிசிக்கு காரசாரமா கருவாட்ட கிருவாட்ட வெச்சு சாப்டா தானே உள்ளே இறங்குது." என்றான் சன்னாசி. "காலங்காத்தால அவன் கிட்ட வம்பிழுக்கிறிகளே மாமா" என்றாள் சைக்கிள் கடை பூமாரி,  பூமாரி வீட்டுக்காரன் ஜெயம் பட்டாளத்துக்காரருக்கு சின்னையா பேரன், அனந்தர சொக்காரன் அவன் ஊர் பள்ளிகூடத்துல சத்துணவு அமைப்பாளரா இருக்கான். "எம்மா பூமாரி உங்க மாமா என் வீட்டு கூரைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்து பார்த்தது மாதிரியே சொல்லுதாறு பாரும்" என்றான் சன்னாசி   "உனக்கும் வேலையில்ல உங்க முதலாளிக்கும் வேற வேலையில்லை என்றாள்" பூமாரி "முதலாளி என் பொண்டாட்டி கருவாட்ட வதக்கி வச்சிறுக்கான்னு எப்படி கரெக்டா  சொன்னிங்க" என்று கேட்டான் சன்னா...

வேர் தனது தனது கிளைக்கு எழுதும் கடிதம்

வேர் தனது தனது கிளைக்கு எழுதும் கடிதம் அன்பிற்குறிய ஆஷாவுக்கு,  உன் அப்பாவுக்கு உயிரும்,  உனக்கு உறவுகளும் கொடுத்த உன் பாட்டியின் கடிதம். உனக்கு தெரிந்தும், தெரியாமலும் உள்ள சிலவற்றை தெரிவிக்கவே இந்த கடிதம். நலம் நலமறிய ஆவல். கத்தியும் இரத்தமுமின்றி சிசரியன் அறியா காலத்தில்,  சிசுவாய் நீ பிறவிக்க உன் அன்னைக்கு பேரு காலம் பார்த்தவள் நான்.  உன் அம்மாவின் பேருகாலம் பார்த்தததால், நான் பேரு கால மருத்துவரானேன்... உனது ஒரு வயதில் உன் கண் அருகில் கட்டி வந்தது,  அப்பொழுது பன்னி வாகை இலையை உப்போடு கலந்து, கைகளில் கசக்கி உன் கட்டியில் கட்டினேன். கட்டி காணாமல் போனது.  அன்று நான் தான் உன் கண் மருத்துவர். உன் இரண்டாம் வயதினிலே  உன் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்ப்பட்டது.  உடனே நான் மொசு மொசுக்கை இலையை இடித்து சாரெடுத்து, அதில் வரட்டி எறிந்த சாம்பலை நீர் இட்டு பிசைந்து, உன் தேகமெல்லாம்  தேய்த்து விட்டேன்.  ஒரே நாளில் தழும்பு தடம் இன்றி மறைந்தது.  அன்று நான் உன் தோல் மறுத்துவர். பிறகு உன் ஐந்தாம் வயதில் உன் பல் இடையில் பூச்சி வந்து அவதியுற்றாய். உடன...

சாலை கிணறுகள்

காணாமல் போன சாலை கிணறுகள் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊருக்குள் நுழையும் போது நம்மை வரவேற்ப்பது பெரிய ஆலமரமும் அதன் அருகே  அமைந்திருக்கும் ஒரு கிணறும் தான், தாகம் தீர்க்க வந்த ஏதோ ஒரு காகம் போட்ட எச்சத்தால் அந்த ஆலமரம் வந்திருக்கும். ஆனால் இன்று நம்மை வரவேற்பது, ஏதோ ஒரு செல்போன் டவறும், புரோட்டா கடைகளும் தான். குமரிப் பெண்கள் முதல் கூன் விழுந்த பாட்டிகள்  வரை கிணற்றைச் சுற்றி நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள்.  நீர் இறைக்கும் பொழது வாளியில் இருந்து சிதறும் தண்ணீர் கினற்றில் விழும் பொழுது வரும் சத்தம் ஒரு இசையை கொடுக்கும். கூட்டு ரோட்டில் இறங்கி மூனு மயில் தூறம் நடந்து வந்த களைப்புல அப்படி ஆலமரத்தடியில் ஒதுங்கச் சொல்லும். மரத்தடியில் போய் நின்ன உடனே, "என்ன மாமா ஊருக்கு போய்ட்டு வாரிரா வாரும் இந்த தண்ணிய குடியும்" என்று கூறுவாள் ஒரு அக்கா மகள். அந்த தண்ணிய குடிச்சா தேனா இனிக்கும். வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்த இந்தச் சாலை கிணறுகள், இன்று பாழுங்கிணறாய் மாறிவிட்டது. நீர் கொடுத்த அந்த கிணறு இன்று ஊராரின் கவனிப்பாரற்று குப்ப...

தாயுமானவள்

தாயுமானவள் "தாயுமானவள்" என்ற பெயரில் நான் எழுதிய அடுத்த சிறுகதை. இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த இடத்திலும் சலனப்படாமலே வாழ்ந்து வந்தார் ராமகிருஷ்ணன். மனைவி இறக்கும் பொழுது  ராமச்சந்திரனுக்கு வயது வெறும் முப்பத்தி மூனு தான். மறுமணத்தை பற்றி சிந்திக்கவும் இல்லை, சலனப்பட்டுப்போய் எங்கும் நிற்க்கவும் இல்லை. ஐந்து ஆண்டுகளாக மனைவி சத்தியவாணி உடன் வாழ்ந்த வாழ்வின் நினைவுகளும்,மகன்  விஷ்ணுவுக்கு நல்ல தகப்பனாக வாழவேண்டும் என்ற எண்ணமும் அவரை நல்ல பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தது. தட்டி விழுந்தால் கெட்டு போக கூடிய சூழல்கள் எத்தனையோ இருந்தும் அத்தனையும் கடந்து வந்திருந்தார் ராமகிருஷ்ணன். சட்டமும் சமூகமும் அங்கிகரித்த மறுமணம் கூட, மனைவிக்கு செய்யும் துரோகம் என நினைத்தார். மறுமணத்திற்க்காக பல நெருக்கடிகள். அதனால் சில உறவுகளிடம் உறவை துண்டித்தார். ராமகிருஷ்ணனுக்கு இப்பொழுது வயது ஐம்பத்தெட்டை தொட்டுவிட்டது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளான் துறையில் வேலை செய்கிறார். மகனுக்கு வயது இருபத்தேழு ஆகிறது. அவனும் மத்திய அரசு பணியில் உள்ளான். புள்ளியல் துறையில் டெல்லியில் வேலை செய்கிறான்...

மாட்டு வண்டி பாதையிலே

மாட்டு வண்டி  பா தை யி லே தென்றலின் தலைவாசல் பாம்புக்கோவில் சந்தை, குற்றாலத்திற்க்கு ரயிலில் வருபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்துக்குள்ள வண்டி வரும் பொழுது தென்றல் நம்மை வரவேற்க்கும். மெல்லிய தூறலும், ஜிலுஜிலு காற்றுடன் இதமான காலையாக இருந்தது அந்த காலை நேர பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். பாம்புக்கோவில் சந்தையில் ரயில் இரண்டு நிமிடம் மட்டும் தான் நிற்க்கும். எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இறங்கினார் ஜெயச்சந்திரன் அவர் பின்னாலே இறங்கிய உமா "சித்தப்பா போயிட்டு வரேன்"என்றார்.  "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் விடைகொடுத்தார் ஜெயச்சந்திரன். சொந்த பெரியா மகன் புள்ள, அனந்தர சொக்காரன் மகா. அப்படியிருந்தும் நின்று பேச நேரம் இல்லாதது போல் வேகமாக வெளியே நடந்தார் ஜெயச்சந்திரன். உண்மையிலே நேரம் இருந்தாலும் அவர் இப்படித் தான் செய்வார். இது அவர் குணநலம்,  வாழ்க்கை உணர்ச்சிகளால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என எண்ணுபவர். இது தான் தனி மனிதனுடைய வெற்றிக்கான பார்முலா  என்று வாழ்ந்து வருபவர்.  "நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை பற்றி அசை போட்டால் எதிர்...

தாய் வழிக்கல்வி

தாய் வழிக்கல்வி தாய் வழிக்கல்வி என்ற எனது சிறுகதை முடிந்தால் படியுங்கள். "ஏமோ எனக்கு பனிரெண்டாம் தேதிக்குள்ளஆயிரம் ரூபாய் வேண்டும்" என்றான் அருண். அருண் கேட்டதை கவனிக்காதது போல் "அண்ணாச்சி நேத்து நாலு டீக்கு  கொடுக்கணும் இப்போ ஒரு டீ மொத்தம் நாற்ப்பது ரூபாய்" என கூறியவாறு சங்கரலிங்கம் கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு மீதம் பத்து ரூபாயை கொடுத்தாள் அன்னக்கிளி. கன்னியா குமாரி அருகே ஒர் கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான கோவில் தெருவில் டீ கடை நடத்தி வந்தாள் அன்னக்கிளி.  அருணுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது அண்ணக்கிளியின் கணவர் இறந்து விட்டார். கணவர் கண்ணுக்கு பின் அப்பாவுடன் சேர்ந்து இந்த டீ கடையை நடத்தி வருகிறாள். அருன் நாகர்கோவில் ஒர் பால் டெக்னிக்கில் இறுதியாண்டு படித்து வருகிறான். "ஏம்மா நான் சொல்றது உனக்கு காதுல விழலையா" கொஞ்சம் அழுத்தமாக கேட்டான் அருண். "அதெல்லாம் விழுந்தது, போன வாரம் தானடா ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு போனே, அதுக்குள்ள ஆயிரம் ரூபா கேட்கிறியே  அதான் யோசிச்சுக்கிட்டு, இருக்கேன்", என்றாள் அன்னக்கிளி. "ஏய் இரண்டாயிரம் வாங்கும்போது இ...

மூணு கால் நாய்

மூணு கால் நாய் "மூணு கால் நாய்,  என்ற பெயரில் என் சிறு கதை. ஒத்த நாள் கூட பிரிந்திருந்ததில்லை. உலகத்தை விட்டுப் போய் இன்னோட மூணு நாளாச்சு. மனதளவில் கொலஞ்சி போயிருந்தார் உலகநாதன். பதினைந்து நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கும்போதே கிறுகிறுன்னு வருதுன்னு சொல்லி கீழே விழுந்தா.  தென்காசி திருநெல்வேலி மதுரைன்னு ஆம்புலன்ஸில் சுத்தி கடைசில  பொணமாத்தான் இலஞ்சிக்கு வந்தாள் கோமதி. நோய்க்கு புரியாத பேர வச்சிருக்கான், நோய கண்டுபுடிக்க மெஷின் வச்சிருக்கான், ஆனால் நோய குணமாக்குற மருந்து மட்டும் இல்லைங்கிறான்.  உலகநாதன் பதினைந்து நாள் போராடி பார்த்தார், கடைசியில ஒன்னும் நடக்கல இறந்து போகக் கூடிய வயதும் இல்லை. ஆடி மாசம் வந்தா ஐம்பத்தைந்து வயசு ஆகுது. சங்கரன்கோவில் ஆடித்தபசு அன்னு பிறந்தாள். அதனாலே கோமதின்னு பெயர் வச்சாங்க. மூச்சி விடுததுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட புருஷன நினைச்சி தான் புலம்பினா. "உங்க அப்பாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துட்டேன், அவர நெனைச்சா பாவமா இருக்குடா, அவர சோத்துக்கு கையேந்த வச்சிராதிங்கடா" என கை எடுத்து கும்பிட்டு கேட்டாள். ____ உலகநாதன் வேளாண் துறைய...

அப்பாவின் கைக்கடிகாரம்

அப்பாவின் கைக்கடிகாரம் "அப்பாவின் கைக்கடிகாரம்" என்ற பெயரில் எனது அடுத்த சிறுகதை. "ஏய் செல்வக்கா", என வீட்டு வாசலில் சத்தமிட்டு கொண்டிருந்தான் பால் பண்ணையில் வேலை பார்க்கும் மேலத்தெரு அந்தோணி. மகனுக்கு சோறு வச்சிக்கிட்டிருந்த செல்வமதி வாசலில் தொங்கும் திரையை லைட்டா விலக்கி "என்னய்யா" என வீட்டுக்குள்ள இருந்தவாறே கேட்டாள். "மேல மந்தை பிள்ளையார் கோவில் கிட்ட போதையில வாத்தியார் விழுந்து கிடக்காரு" என்று கூறி விட்டு வேகமாக சென்றான் அந்தோணி. செல்வமதிக்கு இந்த வார்த்தை புதிதல்ல வாரத்தில் ஒரு நாள் ரெகுலராக கேட்க்கதது தான். இருந்தாலும் கொஞ்சம் பதட்டமடைந்தாள் செல்வமதி. சாப்பிட்டுக்கொன்டு இருந்த ரவி எந்த பதட்டமுமின்றி சாப்பிட்டு முடித்தான். ---------- வீட்டு வாசலில் நின்ற பைக்கை ஸடார்ட் பண்ணி கொண்டிருந்த ரவி, வீட்டு வாசலில் ஓர் ஆட்டோ வந்து நிற்ப்பதை பார்த்து வண்டியை ஆப் செய்தான். ஆட்டோக்குள்ள இருந்து மேல மந்தை தலையாரி மகன் வீரப்பன் இரங்கினார். போதையில் இருந்த முத்துச்சாமி வாத்தியார மெதுவா வெளியே இழுத்தார் வீரப்பன், ஆட்டோவுக்குள்ள மேட்டுத்தெரு குமார் இருந்தா...

கிழத்தி

கிழத்தி "கிழத்தி" என்ற எனது சிறுகதை. "சந்திரன்னே அந்த ஆட்டோவில் இருந்து யாரோ உங்கள கூப்புடுதாங்க பாரு" என்றார் கோர்ட் கேண்டின் பழனி. கையில் இருந்த சிகரெட்டை புகைத்தவாரு ஆட்டோ அருகில் சென்று ஆட்டோவை எட்டிப்பார்த்தார் வக்கில் குமாஸ்தா சந்திரன். "ஏவ் முத்துச்சாமியா, நல்லா இருக்கியரா" என்றவர், "இன்னைக்கு என்ன வந்திருக்கீங்க " என கேட்டார் சந்திரன். "இன்னைக்குத்தான் வாய்தா" வண்டிக்குள் இருந்தபடியே கூறினார் முத்துசாமி. "கொஞ்சம் வழி விடுங்க" என கூறி சந்திரனைக் கொஞ்சம் விலக்கினாள் முத்துசாமியின் மனைவி குருவம்மாள். மூணு இட்லி ஒரு வடையும் அவள் கையிலிருந்த தட்டிலிருந்தது. "ஏன் குருவம்மக்கா  வீட்ல சாப்பிட்டுட்டு வந்தருக்கலாமில்ல இங்க கேண்டில்ல வாங்கிட்டு வார" எனக் கேட்டார் சந்திரன். "லேட் ஆயிடுச்சுய்யா அதான் வந்துட்டோம்" என்று கூறியவாறு இட்லியை பிய்த்து முத்துச்சாமியின் வாயில் ஊட்டி விட்டாள். முத்துச்சாமியின் வாயிலிருந்து வரும் எச்சியை அவ்வப்போது தனது முந்தானையாள் துடைத்து விட்டாள். "சரி நான் வரேன்" என கூறிவிட...